தக்காளி தோசை
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 2 கப்
தக்காளி - 4
சின்ன வெங்காயம் - 5
வரமிளகாய் - 8 (காரத்திக்கேற்ப)
சீரகம் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிக்ஸியில் சின்ன வெங்காயத்துடன் வரமிளகாய், சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும். (நீர் அதிகம் விடாமல் கெட்டியாக அரைக்கவும்). அதனுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் இட்லி மாவைச் சேர்த்து, தோசை மாவு பதத்தில் நன்கு கலந்து வைக்கவும்.
தோசைக்கல்லை சூடாக்கி கலந்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி எண்ணெய் விட்டு வேகவிடவும்.
சிவந்ததும் மெதுவாக திருப்பி போட்டு மறுபக்கத்தையும் வேகவிட்டு எடுக்கவும். (தோசை மொறுமொறுப்பாக இல்லையெனில் மேலும் சிறிது இட்லி மாவு சேர்த்துக் கொள்ளவும்).
சூடான தக்காளி தோசை தயார்.