தக்காளி இட்லி ஃப்ரை
0
தேவையான பொருட்கள்:
இட்லி - 10 துண்டுகள்
வெங்காயம் - 3
பூண்டு - 10 பல்
தக்காளி சாஸ் - 1 கப்
எண்ணெய் - அரை லிட்டர் பொரிக்க
பச்சைமிளகாய் - 1
செய்முறை:
சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இட்லியை அதில் பொரித்து எடுக்கவும்.
பிறகு வேறு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
நறுக்கின பூண்டு, நறுக்கின பச்சை மிளகாய் ஆகியவற்றை அத்துடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு பொரித்த இட்லியை அதில் போடவும். அத்துடன் தக்காளி சாஸ் ஊற்றி எல்லாம் ஒன்றாக சேர்த்து நன்கு கிளறவும்.
பிறகு இறக்கி சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.