தக்காளி அவல் உப்புமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அவல் - 3 கப்

பொடியாக அரிந்த தக்காளி - 2 கப்

பொடியாக அரிந்த குடமிளகாய் - 1/4 கப்

உப்புடன் வேக வைத்த சோள முத்துக்கள் - 1 சோள காம்பு

பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி இலை - ஒரு கை

பொதின இலைகள் - 1/4 கப்

கடுகு - 1 தேக்கரண்டி

பொடியாக அரிந்த வெங்காயம் - 1 கப்

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அவலை நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும். பிறகு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகைப்போடவும். அது வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு தக்காளி, குட மிளகாய், மஞ்சள் தூள், சோளம் சேர்த்து சிறிது உப்பையும் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.

பிறகு அவல், புதினா, கொத்தமல்லி இலைகள் சேர்த்து குறைந்த தீயில் சில நிமிடங்கள் வதக்கவும்.

குறிப்புகள்: