டோஸ்ட் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்:
ப்ரௌன் ப்ரெட் ஸ்லைஸ் - 12
பச்சை சட்னி - 1/2 கப்
வெண்ணெய் - 1 கப்
துருவிய பனீர் - 1/2 கப்
துருவிய கேரட் - 1/2 கப்
துருவிய கோஸ் - 1/2 கப்
நருக்கிய மல்லித்தழை - 1/4 கப்
சில்லி கார்லிக் சாஸ் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ப்ரெட் ஸ்லைசின் இருபுறமும் வெண்ணெய் தடவவும்.
அதன்மேல் பச்சை சட்னியைத்தடவிக்கொள்ளுங்கள்.
துருவிய காய் கறிகள்,பனீர்,சாஸ், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இந்தக்கலவையை ப்ரெட்டின் ஒருபுறம் பரத்தினால் போல வைத்து மற்றொருப்ரெட்ஸ்லைசால் மூடி தோசைக்கல்லில் போட்டு,சுற்றிலும் வெண்ணெய் போட்டு, இருபுறமும் நன்கு மொறு மொறுப்பாக வேகவிட்டு இறக்கி, சூடாகப்பரிமாறவும்.