டயட் அடை (1)
தேவையான பொருட்கள்:
கருப்பு கொண்டைகடலை - 1/2 கப்
கொள்ளு - 1/2 கப்
பார்லி - 1/4 கப்
பர்கல் (கோதுமை ரவை) - 1/4 கப்
புழுங்கல் அரிசி - 1/4 கப்
முழு பாசிப்பயறு - 1/4 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
இஞ்சி - 25 கிராம்
பூண்டு - 5 பல்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - அரை கைப்பிடி
சோம்பு - ஒரு மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - நான்கு
நல்லெண்ணெய் (அல்லது) ஆலிவ் ஆயில் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பார்லி மற்றும் கோதுமை ரவை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் இரவே ஊற வைக்கவும். பார்லியை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். கோதுமை ரவை (பர்கல்) ஒரு மணி நேரம் ஊறினால் போதும்.
பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கிரைண்டரில் முதலில் அரிசியை போட்டு சிறிது நேரம் அரைத்து கொண்டு கடலைப் பருப்பு தவிர மற்ற அனைத்து பொருட்களையும் போட்டு அரைக்கவும்.
பாதி அரைய ஆரம்பித்ததும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பச்சைமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை மற்றும் சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். கடலைப்பருப்பை கடைசியாக போட்டு ஓடவிடவும். எல்லாம் சேர்ந்து முக்கால் பாகம் அரைப்பட்டவுடன் எடுத்து விடவும்.
கலவையை உப்பு போட்டு கலக்கி வைக்கவும். தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம், அள்ளி ஊற்றி தேய்ப்பது போல் இருக்கட்டும்.
அடுப்பில் தவாவை வைத்து ஒரு கரண்டி மாவை எடுத்து அடையாக வார்த்து சுற்றிலும் நல்லெண்ணெய் (அல்லத)
அடிப்பாகம் வெந்ததும் திருப்பி போட்டு நன்கு மொறுகலாக ஆனதும் எடுக்கவும். இரண்டு பக்கமும் நன்கு வெந்து மொறுகியதும் கருக விடாமல் எடுக்கவும்.
குறிப்புகள்:
இதற்கு தொட்டு கொள்ள வெல்லம், பொட்டுக்கடலை துவையல், வற்றல் குழம்பு, மீன் குழம்பு, உளுந்து துவையல், புதினா துவையல் எல்லாம் பொருத்தமாக இருக்கும