டயட் அடை

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கொள்ளு - 1/4 கப்

பார்லி - 1/4 கப்

பர்கல் - 1/4 கப்

வெள்ளை சென்னா - 1/4 கப்

புழுங்கல் அரிசி - 1/4 கப்

வால் நட் - 1/4 கப்

ராகி மாவு - ஒரு மேசைக்கரண்டி

இஞ்சி - ஒரு அங்குல‌ துண்டு

பூண்டு - 3 ப‌ல்

ப‌ச்சை மிள‌காய் - ஒன்று

கொத்தம‌ல்லி (பொடியாக‌ நறுக்கியது) - சிறிது

புதினா (பொடியாக‌ நறுக்கியது) - சிறிது

க‌றிவேப்பிலை (பொடியாக‌ நறுக்கியது) - சிறிது

சின்ன‌ வெங்காய‌ம் ‍(பொடியாக‌ நறுக்கியது) - 6

ஆலிவ் ஆயில் (அல்லது) நல்லெண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொள்ளு, வெள்ளை சென்னா, அரிசியை இரவே ஊற போடவும்.

பர்கல், பார்லி அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன் ஊற வைக்கவும்.

வால் ந‌ட்டை ஒரு ம‌ணி நேர‌ம் முன் கொதிக்கும் வெந்நீரில் ஊற‌வைத்து தோலெடுக‌க்வும். அரைக்கும் போது பூண்டு இஞ்சியை சேர்த்து அரைத்து கொள்ள‌வும்.

அரிசியை போட்டு ந‌ன்கு அரைத்து கொண்டு மீதி உள்ள‌ அனைத்து பொருட்க‌ளையும் முக்கால் ப‌த‌த்திற்கு அரைக்கவும். அரைத்த‌ க‌ல‌வையில் வெங்காய‌ம், கொத்தம‌ல்லி, புதினா க‌றிவேப்பிலையை பொடியாக அரிந்து சேர்க்க‌வும். அரைத்த‌ க‌ல‌வை கெட்டியாக இருக்க‌ வேண்டும்.

தோசைக‌ளாக‌ கொஞ்ச‌ம் ஆலிவ் ஆயில் தெளித்து சுட்டெடுக்க‌வும்.

குறிப்புகள்:

இத‌ற்கு தொட்டு கொள்ள‌ மீன் குழ‌ம்பு, கார‌ குழ‌ம்பு, வ‌த்த‌ குழ‌ம்பு அல்ல‌து புதினா துவைய‌ல்.