ஜவ்வரிசி உப்புமா (2)

on on on off off 3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சின்ன ஜவ்வரிசி - 1/2 கிலோ

பாசி பருப்பு - 100 கிராம்

கடலை பருப்பு - 2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 6

தேங்காய் துருவல் - 1 மூடி

பச்சை மிளகாய் - 6

இஞ்சி - ஒரு துண்டு

எழுமிச்சம் பழம் - 1/2 மூடி

கொத்துமல்லி - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஜவ்வரிசியை 1 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.

பாசிப்பருப்பை உதிர் உதிராக வேக வைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் வதக்கவும்.

ஊற வைத்த ஜவ்வரிசியை கொட்டி, உப்பு சேர்த்து கிளறவும்.

வேக வைத்த பாசிப்பருப்பு, துருவிய தேங்காய் சேர்த்து கிளறி, எழுமிச்சம்பழம் பிழிந்து இறக்கவும்.

குறிப்புகள்: