ஜவ்வரிசி உப்புமா (1)

on on off off off 2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சின்ன ஜவ்வரிசி - 1/4 கிலோ

வறுத்த நிலக்கடலை - 50 கிராம்

தேங்காய் - 1 மூடி

சின்ன வெங்காயம் - 10

பச்சை மிளகாய் - 5

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஜவ்வரிசியைக் கழுவி, 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

நிலக்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, ஊற வைத்த ஜவ்வரிசி, உப்பு சேர்த்து கிளறி, துருவிய தேங்காய், பொடித்த நிலக்கடலை சேர்த்து கிளறி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

குறிப்புகள்: