சோள ரவை புளி உப்புமா
0
தேவையான பொருட்கள்:
சோள ரவை - 1 கப்
புளி - சின்ன எலுமிச்சை பழ அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்:
நல்லெண்ணை - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - நான்கு பாதியாக கிள்ளியது
கறிவேப்பிலை இலை - 5
செய்முறை:
முதலில் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையை ஊற்றி காய்ந்தவுடன் கடுகு,
உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை இலை பெருங்காயம் போடவும்.
பிறகு புளியை தண்ணீர் ஊற்றி மூன்று கப் அளவு கரைத்து வாணலியில் ஊற்றவும்.
உப்பு போடவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் சோள ரவையை போட்டு நன்றக கிளறவும்.
நன்றாக வெந்தவுடன் இறக்கி வைக்கவும்.
குக்கரிலும் வைக்கலாம். இரண்டு விசில் வந்தவுடன் இறக்கவும்.