சோள தோசை (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சோளம் - 2 டம்ளர்

பச்சரிசி - 1/2 டம்ளர்

சின்ன வெங்காயம் - 10

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது

கொத்துமல்லி - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு.

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சோளத்தை தண்ணீர் தெளித்து, பிசிறி, மிக்சியில் போட்டு, ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும். உமி தனியாக வரும், வராவிட்டால் இன்னொரு முறை போட்டு எடுத்து, உமியை புடைத்து எடுக்கவும்.

சோளத்தை, அரிசியுடன் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு கிரைண்டரில் போட்டு நைசாக அரைக்கவும்.

வாணலியில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு சேர்த்து கரைக்கவும்.

மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, சுட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: