சோள தோசை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சோளம் - 1 கப்

இட்லி அரிசி - 1/2 கப்

உளுந்து - 1/4 கப்

வெந்தயம் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சோளத்தை சுடு நீரில் 8 மணி ஊறவைக்க வேண்டும்.

அரிசி உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாக 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

ஒன்றாக அரைத்து உப்பு போட்டு 8 மணி நேரம் புளிக்க விட்டு தோசையாக வார்த்தெடுக்கவும்.

குறிப்புகள்:

எள்ளு பொடியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.