சோள தோசை
தேவையான பொருட்கள்:
வெள்ளைச் சோளம் - 1 கப்
குண்டு உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குண்டு உளுந்தை நன்றாகக் கழுவி மூழ்கும் அளவு நீர் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும். வெந்தயத்தை தனியாக ஊற வைக்கவும். சோளத்தை 6 மணி நேரம் ஊற வைக்கவும். (சோளம் கடினத் தன்மையுடையதால் ஊறுவதற்கு குறைந்தது 6 மணி நேரமாகும். வெந்நீரில் ஊறவைத்தால் நேரம் சற்று குறையலாம்).
சோளம் ஊறியதும் மிக்ஸியில் போட்டு நீர் விடாமல் இரண்டு மூன்று சுற்றுகள் அரைக்கவும். பிறகு நீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். உளுந்து மற்றும் வெந்தயத்தை தனித்தனியாக நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து உப்புப் போட்டு நன்றாகக் கலந்து 6 மணி நேரம் புளிக்கவிடவும்.
மாவு புளித்ததும் தோசைக்கல்லை சூடாக்கி, மெல்லிய தோசைகளாக ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்புகள்:
இந்த மாவில் பணியாரமும் செய்யலாம்.