சோயாபீன்ஸ் தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சோயா பீன்ஸ் - 1 கப்

இட்லி அரிசி - 4 கப்

உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

வெங்காயம் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் -1 கப்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இழை - 1/2 கப்

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

சோயாபீன்ஸ் ,அரிசி,உளுந்தை ஒன்றாக 8 மணி நேரம் ஊறவைக்கவும்; நைசாக அரைக்கவும்.

அதனுடன் உப்பு சேர்த்து கலந்து புளிக்கவைக்கவும்

வாணலியில் எண்ணை விட்டு கடுகு,சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி, அதனுடன் கறிவேப்பிலை கொத்தமல்லி இழை சேர்க்கவும்.

தாளித்ததை புளித்த மாவில் கொட்டி திட்டமான தோசைகளாக ஊற்றவும்

குறிப்புகள்: