சேமியா ரவை கிச்சடி
தேவையான பொருட்கள்:
வறுத்த சேமியா - 1 கப்
வறுத்த ரவை - 1/2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 1
கடுகு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வரமிளகாய் - 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10 இலை
நெய் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 3 கப்
நறுக்கிய கொத்தமல்லி இலை - அரை கைப்பிடி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ரவையை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளுங்கள். சேமியாவையும் வறுத்துக் கொள்ளுங்கள்.
எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, சீரகம், வரமிளகாய், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை என வரிசையாக தாளித்து மஞ்சள் தூள், உப்பு போட்டு தண்ணீரும் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
தண்ணீர் கொதித்ததும் முதலில் சேமியா சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடுங்கள் பின் ரவை சேர்த்து தீயை குறைத்து விட்டு கொதிக்க விடுங்கள்.
உப்புமா போல் வந்ததும் தீயை அணைத்து விட்டு கொத்தமல்லி இலையும், 2 தேக்கரண்டி நெய்யும் விட்டு கிளறி இறக்கவும்.