சேமியா மோர் உப்புமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சேமியா - 1 கப்

புளித்த மோர் - 2 கப்

பெரிய வெங்காயம் - 2

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

நெய் அல்லது டால்டா - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி

கல் உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும். பெரிய வெங்காயத்தை தோலுரித்து, மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.

வாணலியில் நெய்/டால்டா ஊற்றி காய்ந்ததும் சேமியாவை போட்டு ஒரு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

அதனுடன் வெங்காயம் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் மோரை ஊற்றி உப்பு போட்டு கிளறிவிட்டு கொதிக்கவிடவும்.

ஒரு கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள சேமியாவைச் சேர்த்து நன்கு கிளறவும்.

10 நிமிடங்கள் நன்கு கிளறிவிட்டு வெந்ததும் இறக்கிவிடவும்.

குறிப்புகள்: