சேமியா பொங்கல்
தேவையான பொருட்கள்:
வறுத்த சேமியா - 1 1/2 கப்
வறுத்த சிறு பருப்பு - 1/4 கப்
மிளகாய் வற்றல் - 3
தனியா - 1 தேகரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிது
முந்திரி (விரும்பினால்) - கொஞ்சம்
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
நெய் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிறுபருப்பை வேக வைத்து வைக்கவும்.
1 தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், மிளகு, சீரகம், தனியாவை வறுத்து மிக்சியில் பொடிக்கவும்.
மீதம் நெய் விட்டு முந்திரி வறுத்து எடுக்கவும்.
அதே நெய்யில் பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து வதக்கவும்.
இதில் வேக வைத்த பருப்பு சேர்த்து 3 கப் தண்ணீர் விட்டு உப்பு, பொடித்த மசாலா சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் சேமியா சேர்த்து கிளறி மூடி போட்டு சிறுந்தீயில் வேக விடவும்.
பொங்கல் பதம் வந்ததும் எடுத்து முந்திரி சேர்த்து கிளறி விடவும்.