சேமியா தோசை
தேவையான பொருட்கள்:
சேமியா - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
மோர் - 2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
காரட், முட்டைகோஸ், குடை மிளகாய், பாலக் - 1 கப் (எல்லாம் சேர்த்து பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் + மிளகு தூள் - 1/4 tsp
இஞ்சி - ஒரு அங்குல துண்டு (துருவியது)
சீரகம் - 1 tsp
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
கருவேப்பிலை - ஒரு பிடி
செய்முறை:
சேமியா மற்றும் மாவை மோரு மாவிற்கு தேவையான உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் சீரகம் போட்டு பொரியவிட்டு, கருவேப்பிலை பெருங்காயம் சேர்க்கவும்.
பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியதும் எல்லா காயையும் சேர்த்து வதக்கவும்.
மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி காய் வெந்ததும் மாவில் கொட்டி கலக்கவும்.
தோசையாக வார்த்தெடுக்கவும்.
எல்லா வகையான சட்னியும் இதற்க்கு பொருந்தும். வெறும் வெண்ணை வைத்துக் கூட சாப்பிடலாம்.