சேமியா உப்புமா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சேமியா - 1 கப்

நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 4

கடுகு,உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 இனுக்கு

கொத்தமல்லி தழை - 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 1 1/2 தேக்கரண்டி

முந்திரி பருப்பு - 10

நெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பை வறுத்து எடுக்கவும்.

அதே நெய்யில் சேமியாவையும் வறுக்கவும்.

பின் மற்றொரு வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து கடலை பருப்பு போட்டு பின் கறிவேப்பிலை போடவும்.

பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு உப்பு சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பின் வறுத்த சேமியா போட்டு நன்கு வேகும் வரை கிளறி இறக்கி முந்திரி, கொத்தமல்லி, தேங்காய் துருவல் தூவி பரிமாறலாம்.

குறிப்புகள்: