சேமியா இட்லி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சேமியா - 1/2 கப்

ரவை - 1/2 கப்

தேங்காய் துருவல் - 1/4 கப்

ஆப்ப சோடா - 1/4 தேக்கரண்டி

தயிர் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி

உடைத்த முந்திரி - ஒரு தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

எண்ணெய் - சிறிது

செய்முறை:

சேமியா ரவையை தனித்தனியாக 2 ஸ்பூன் எண்ணெயில் வறுத்து ஒன்றாக கலந்து வைக்கவும்.

தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து மற்ற பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கடைசியாக தயிர் சேர்த்து நன்றாக கலக்கி இறக்கவும்.

இட்லி போல் இட்லி தட்டுக்களில் ஊற்றி வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இதே கலவையில் தோசையும் ஊற்றலாம். தோசை ஊற்றினால் அடுப்பை சிம்மில் வைத்து சுடவும்.