சேமியா அடை (2)
தேவையான பொருட்கள்:
சேமியா (வறுத்தது) - 200 கிராம்
அரிசி மாவு (வறுத்தது) - 200 கிராம்
ரவை - 200 கிராம்
தயிர் - 200 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மல்லி இலை, புதினா - சிறிது
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
சக்தி கறிமசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், மிளகாய், புதினா, மல்லி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை போட்டு லேசாக வதக்கவும்.
பின் அதனுடன் சேமியா, ரவை, அரிசிமாவு, கறி மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தயிர், உப்பு, புதினா மல்லி இலை, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 20 நிமிடம் ஊற விடவும் (ஊறிய மாவு கட்டியாக இருக்கும்)
மாவை அடை தோசை பதத்துக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்
அடுப்பில் தவாவை வைத்து தோசை ஊற்றவும், எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பி போட்டு சுடவும்.
குறிப்புகள்:
தேங்காய் சட்னி சூப்பர் காம்பினேஷன்.