சேமியா அடை

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சேமியா - 1 கப்

கெட்டியான தயிர் - 1 கப்

மைதா (அல்லது) அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி

வெங்காயம் - 1

தக்காளி - 1

இஞ்சி - ஒரு துண்டு

பச்சைமிளகாய் - 2

கறிவேப்பில்லை, கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பில்லை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.

சேமியாவில் தயிரை ஊற்றி கிளறி கால் மணி நேரம் ஊற விடவும். பின்பு அதில் மைதா (அல்லது) அரிசி மாவினை தூவி கிளறவும்.

அதில் தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.

பிறகு தவாவை காய வைத்து சிறிது மாவை உருண்டையாக எடுத்து அடையாக தட்டவும். சுற்றி எண்ணெய் ஊற்றி இரு புறமும் வெந்ததும் எடுக்கவும்.

குறிப்புகள்:

சட்னி அல்லது சாஸுடன் பரிமாறலாம்.