செட் தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 3 கோப்பை

புழுங்கலரிசி - 1 கோப்பை

உளுந்து - 3/4 கோப்பை

வேகவைத்த சாதம் - 1/2 கோப்பை

வெந்தயம் - 1 தேக்கரண்டி

ஆப்பச்சோடா - ஒரு சிட்டிகை

எண்ணெய் - தேவையான அளவு.

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசி வகைகள், உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துக் கொள்ளவும்.

பின்பு அவற்றை குறைந்தது நான்கு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் சாதத்தைச் சேர்த்து மையாக அரைக்கவும்.

பிறகு அரைத்த மாவில் உப்பைச் சேர்த்து நன்கு கலக்கி இரவு முழுவதும் புளிக்க விடவும்.

அடுத்த நாளன்று சோடாவைச் சிறிது நீரில் கரைத்து ஊற்றி மாவை நன்கு கலக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லில் எண்ணெய் தடவி காயவைத்து ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி வழக்கமான தோசை அளவை விட சற்று தடிமனாக இருக்குமாறு தோசை வார்க்க வேண்டும்.

தோசை ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு சுற்றிலும் எண்ணெயை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.

குறிப்புகள்:

வடகறி, மீன் குழம்பு, தக்காளி சட்னி போன்றவை பொருத்தமாக இருக்கும்.