சூப்பர் தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 3 கப்

பச்சரிசி - 1 கப்

உளுந்து - 1 கப்

மைதா - 3/4 கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

இரு அரிசிகளையும் சுத்தம் செய்து, சுத்தமான நீரில் ஊற விடவும்.

அதே போல் உளுந்தையும் சுத்தம் செய்து மூழ்கும் வரை நீர் விட்டு ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.

சுமார் 8 மணி நேரம் வைத்து இருந்து இரண்டையும் கலந்து கிரைண்டரில் அரைக்கவும். கிரைண்டரில் இருந்து மாவை அள்ளும் சமயம் மைதாவை சேர்த்து அரைய விட்டு,நன்கு கலந்ததும் மாவை எடுத்து உப்பு கலந்து இரவு முழுக்க புளிக்க விடவும்.

மறு நாள் தோசை செய்ய நடுவில் சற்று குழிவான, நாண்ஸ்டிக் தவாவை எல்லாம் தவிர்த்து தட்டையான தவாவை தேர்ந்தெடுக்கவும்.

தவா சூடேறியதும் சுத்தமான துணியால் துடைத்து, சிறிது நீர் தெளித்து ஒரு கரண்டி அளவு எடுத்து மெல்லிய தோசையாக வார்க்கவும்.

வார்த்த தோசை ஓரம் முழுவதும் தவாவை விட்டு லேசாக மேல் எழும்பி வரும் பொழுது சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப்போடவும்.

குறிப்புகள்: