சுலப முறை பொங்கல்
1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
சிறு பருப்பு - 1/4 கப்
மிளகு - 1 தேக்கரணடி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 2 சிட்டிகை
தண்ணீர் - 4 அல்லது 4 1/2 கப்
முந்திரி (விரும்பினால்) - 5
எண்ணெய், நெய் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி, பருப்பை ஒன்றாக கலந்து கழுவி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து காய்ந்ததும் மிளகு, சீரகம் தாளிக்கவும்.
இதில் பெருங்காயம் சேர்த்து உடனே அரிசி பருப்பு கலவையில் சேர்க்கவும்.
இத்துடன் உப்பு, நெய்யில் வறுத்த முந்திரி, தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரில் 1 விசில் விட்டு 15 நிமிடம் சிறுந்தீயில் வைத்து எடுக்கவும்.
அல்லது வழக்கம் போல் 5 விசில் வைத்தும் எடுக்கலாம். எடுத்ததும் நன்றாக ஒரு முறை கலந்து விடவும்.