சுருள் பரோட்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1/2 கிலோ

சர்க்கரை - 1 தேக்கரண்டி

ஆப்ப சோடா - 1/4 தேக்கரண்டி

நெய் - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மாவு, சர்க்கரை, ஆப்ப சோடா, உப்பு, நெய் எல்லாவற்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.

நன்கு அடித்து பிசைந்து 1/4 மணி நேரம் வைக்கவும்.

உருண்டைகளாக செய்து கொள்ளவும்.

மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து, லேசாக எண்ணெய் தடவி, புடவை கொசுவம் வைப்பது போல் மடிக்கவும்.

மடித்ததை வட்டமாக சுருட்டி கொள்ளவும். சற்று கனமாக தேய்த்து தோசை கல்லில் சுட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: