சிக்கன் கொத்து பரோட்டா
தேவையான பொருட்கள்:
பரோட்டா - 4
எலும்பில்லாத சிக்கன் - ஒரு கைப்பிடி
முட்டை - 3
குடை மிளகாய் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அப்சரா குறிப்பில் உள்ளது போல் ( http://www.arusuvai.com/tamil/node/14477 ) பரோட்டா செய்து தயாரா வைத்துக் கொள்ளவும்.
அதை கையால் சின்ன சின்ன துண்டுகளா பிய்த்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் எல்லாம் சேர்த்து வதக்கவும்.
காய் வதங்கியதும் பொடியாக நறுக்கிய எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.
சிக்கன் வெந்ததும் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டி பச்சை வாசம் போக வதக்கவும்.
இதில் பரோட்டாவை சேர்த்து பிரட்ட வேண்டும்.
பரோட்டா மசாலாவோடு நன்றாக கலந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி கலந்து வெந்ததும் எடுக்கவும்.
குறிப்புகள்:
விரும்பினால் கடைசியாக எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
சிக்கன் சேர்க்கும் போது நீர் சேர்க்க தேவை இல்லை. அதில் வரும் நீரே போதுமானது.