சிக்கன் குட்டி அடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி எலும்பில்லாதது - 300 கிராம்

புழுங்கலரிசி - 1 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி

மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி

மல்லி பொடி - 2 தேக்கரண்டி

கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி

பட்டை - ஒன்று

மல்லி தழை - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழியை சிறுத் துண்டுகளாக்கி வைக்கவும்.

அரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து நன்கு ஊறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிரைண்டரிலோ, மிக்ஸியிலோ நன்றாக அரைத்து எடுத்து, ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து அரைத்த மாவை ஊற்றவும்.

அடுப்பில் வைத்து மாவை கைவிடாமல் கிளறிக் கொண்டே வரவும். மாவு நன்கு கைகளில் ஒட்டாமல் கெட்டியாக உருண்டு வரும் போது அடுப்பை அணைக்கவும்.

வேறு ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை, கறிவேப்பிலை, நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து வதக்கவும். அடுத்து மல்லி தழை சேர்த்து மேற் சொன்ன அனைத்து பொடிகளையும் போடவும். வதங்கியதும் கோழியை போட்டு கிளறி உப்பு சேர்க்கவும். அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கோழியை வேக விடவும்.

மாவு ஆறியதும் கையில் எண்ணெய் சிறிது தொட்டுக் கொண்டு கோலிகுண்டு அளவுக்கு மாவை எடுத்து உருண்டைகளாக உருட்டி விரலை நடுவில் வைத்து அழுத்தவும். இதுபோல் அனைத்து மாவையும் செய்து இட்லி தட்டில் வைக்கவும்.

அதை இட்லி பானையில் வைத்து அவித்து எடுக்கவும். பத்து நிமிடத்தில் வெந்துவிடும். வெந்து கொண்டிருக்கும் சிக்கன் கிரேவி திக்காக சுருண்டு வந்ததும் அதில் அவித்த அடையை கொட்டி கிளறவும். சிறிது நேரம் கிளறி பின் அடுப்பை நிறுத்தவும்.

குறிப்புகள்: