சிக்கன் கீமா தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 2 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - ஒரு கொத்து

பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - சிறிய துண்டு

டொமேட்டோ கெட்சப் - 1/2 தேக்கரண்டி

சிக்கன் பொரித்த துண்டுகள் - 10

செய்முறை:

தோசை தவாவை சூடுப்படுத்தி மாவை சற்று தடிமனாக பெரியதாக ஊற்றவும்.

உடனுக்குடன் வெங்காயம், கறிவேப்பிலை, குடைமிளகாய், டொமேட்டோ கெட்சப் கலந்து மேலே தூவி மெல்ல அமுக்கி விடவும்.மாவுடன் ஒட்டி விடும்.

சிறிது நெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும். ஒருபுறம் மொறுகியதும் மறுபுறம் வெங்காயம் மொறுகும்வரை வேகவிடவும்.

சிக்கன் பொரித்த துண்டுகளை மிக்ஸியில் இட்டு ஒரு அடி அடித்து எடுத்து வைக்கவும். அதனை தோசையின் மேல் பரப்பி இரண்டாக மடித்து பரிமாறவும்.

குறிப்புகள்: