சாதம் அடை (1)

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சாதம் - 1 கப்

கடலை மாவு - 1/4 கப்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 3

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். பச்சைமிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி வைக்கவும். சாதத்துடன் கடலை மாவு, உப்பு சேர்த்து நன்கு பிசையவும். அதன் பின் வதக்கிய வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய், கொத்தமல்லி சேர்த்து பிசையவும்.

எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி தோசை கல்லில் எண்ணெய் தேய்த்து தட்டவும். முதலில் தடியாக தட்டவும். சுற்றி எண்ணெய் விடவும். பிறகு திருப்பி போடும் போது தோசை கரண்டி வைத்து இன்னும் மெல்லியதாக தட்டவும். மிதமான தீயில் வேக விட வேண்டும்.

குறிப்புகள்: