சர்க்கரை பொங்கல்

on on on off off 5 - Good!
3 நட்சத்திரங்கள் - 5 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

பாசி பருப்பு - 1/2 கப்

வெல்லம் - 1 கப்

ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி

முந்திரி - 10

உலர் திராட்சை - 10

பச்சை கற்பூரம் (விருப்பப்பட்டால்) - சிறிது

நெய் - 1/4 கப்

செய்முறை:

அரிசி, பருப்பை களைந்து 7 கப் நீர் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.

அடுப்பை சிம்மில் வைத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம், 1 கரண்டி தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துவிடவும்.

பச்சை வாசனை போனதும் பச்சை கற்பூரம், வெந்த அரிசி, பருப்பு கலவையை வெல்லத்தில் சேர்த்து சிறிது நெய் ஊற்றி கிளறவும்.

மற்றொரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் தூளை வறுத்து பொங்கலில் சேர்க்கவும்.

பரிமாறும் போது பொங்கலின் மேல் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி பரிமாறவும்.

குறிப்புகள்: