சப்பாத்தி (3)
8 - Good!
3 நட்சத்திரங்கள் - 8 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ஆட்டாமா - 500 கிராம்
பால் - 1 மேசைக்கரண்டி
பட்டர் - 1 மேசைக்கரண்டி
முட்டை - 1 (விரும்பினால்)
கொதிநீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஆட்டாமா, உப்பு, பால், பட்டர், முட்டை ஆகியவற்றை போட்டு கலக்கவும். அதன் பின்பு கொதிநீர் விட்டு நன்றாக குழைக்கவும்.
குழைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும். சிறு உருண்டைகளில் ஒன்றை எடுத்து வட்டமாக தட்டவும் .
அடுப்பில் தோசைக்கல் வைத்து அது சூடானதும் கொஞ்சமாக எண்ணெய் தடவவும். வட்டமாக தட்டிய மாவினை போட்டு வேகவிடவும். அது வெந்ததும் அதனை மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிடவும். இருபக்கமும் வெந்ததும் சுவையான, மென்மையான சப்பாத்தி தயாராகிவிடும். இதனைப்போல மற்றைய சப்பாத்திளையும் தயார் செய்து பரிமாறவும் .