சத்து ரொட்டி
0
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
சத்து மாவு - 1/2 கப்
ஓட்ஸ் - 100 கிராம்
வெங்காயம் - 1/4 கப்
கொத்தமல்லி - 1/4 கப்
கேரட் துருவல் - 1/4 கப்
முட்டைகோஸ் துருவல் - 1/4 கப்
பொடியாய் நறுக்கிய பச்சை மிளகாய் - 3
துருவிய இஞ்சி - சிறு துண்டு
சோடா உப்பு - சிறிதளவு
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஓட்ஸை வெறும் வாணலியில் லேசாக வறுத்து பொடித்துக்கொள்ளவும்
மேலே கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் கொட்டி கலந்து வைக்கவும்
தேவைக்கு சுடு தண்ணீர் சேர்த்து பினைந்துக்கொள்ளவும்.
1 மணிநேரம் ஊறிய பின் சப்பாத்திகளாக கவனமாக திரட்டவும்
பின் தோசைகல்லில் எண்ணெய்விட்டு சுட்டு எடுக்கவும்.