சத்து மாவு இடியாப்பம்
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
சத்து மாவு - 2 கப்
சுடுநீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேவையானப் பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
கடையில் வாங்கிய சத்து மாவாக இருந்தால், அதை வெறும் வாணலியில் 2 நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும்.
சத்து மாவுடன் உப்பு மற்றும் சுடுநீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை இடியாப்பக் குழலில் போட்டு, இட்லி தட்டில் இடியாப்பங்களாகப் பிழிந்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
விரும்பிய க்ரேவி அல்லது குருமாவுடன் பரிமாறவும்.