சட்னி தோசை

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 1 கப்

முட்டை (ஒரு முட்டைக்கு ஒரு தோசை) - தேவைக்கு

எண்ணெய் - தேவைக்கு

சட்னிக்கு:

தக்காளி - 2

பூடு - 1

வரமிளகாய் - 5

செய்முறை:

எண்ணெயில் சட்னிக்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து குழையும் வரை ஹைப்ளேமில் வைத்து வதக்கவும்.பின்னர் ஆற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். சட்னி தயார்

தோசை சட்டியில் எண்ணெய் தடவி தோசை வார்க்கவும் அதன் மேல் முட்டை உடைத்தூற்றி பரப்பவும். அதன் மேல் சட்னியில் 3 தேக்கரண்டி சேர்த்து பரப்பவும்

சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடிவிடவும். வெந்ததும் பின் பக்கம் திருப்பி போட்டு வேக விட்டு பின்னர் பரிமாறவும்

குறிப்புகள்: