க்ரிஸ்பி புசு பூரி
தேவையான பொருட்கள்:
மைதா - 3 கப்
சோடா மாவு - ஒரு பின்ச்
சர்க்கரை - 1 தேக்கரண்டி
தயிர் - 2 தேக்கரண்டி
வறுத்த ரவை - 2 தேக்கரண்டி
தண்ணீர் - பிசைய தேவையான அளவு
எண்ணெய் - பூரி பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பூரி செய்வதற்கு மூன்று மணி நேரம் முன்பே மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் போட்டு மாவை நன்றாக பிசையவும். பிறகு மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு ஒரு வாளியில் வைக்கவும்.
பிறகு பூரி சுடும் முன்பு எல்லா மாவையும் உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.சிறிது மைதா மாவை கையில் தடவி உருண்டைகளாக உருட்டி போட்டு வைத்து விடுங்கள்.
இப்போது அந்த உருண்டையை சப்பாத்தி கல்லில் தேய்த்து ஒரு பெரிய வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்.
சிறிய பூரியோ, பெரிய பூரியோ உங்கள் விருப்பம் சுட்டு சாப்பிடவும்