கோபி பரோட்டா
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 3 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை - 1/2 கப்
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - ஒரு துண்டு
புதினா இலை - 1/4 கப்
சிறிய துண்டுகளாக்கிய காளிஃப்ளவர் - 1 1/2 கப்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மைதா மாவில் உப்பு, நெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நல்ல கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும்.
காளிஃப்ளவரை ஒரு நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு வடித்து எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி இலை,புதினா,பச்சைமிளகாய்,இஞ்சி இவற்றை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பின் நறுக்கியவற்றை மாவில் சேர்த்து திரும்ப நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
பின் மாவை சிறு உருண்டைகளாக்கி பான் பூரி பலகையில் வட்டங்களாக தேய்த்து ஒரு வட்டத்தின் மீது காளிஃப்ளவரை பரவலாக தூவி அதன் மேல் இன்னொரு வட்டத்தை வைத்து மூடி ஓரங்களை நன்கு ஒட்டி அதன் மீது மைதாமாவு சிறிது தூவி மறுபடியும் மெல்லிய வடங்களாக மெதுவாக தேய்த்துக் கொள்ளவும்.
பின் தவாவில் எண்ணெய் சிறிது ஊற்றி ஒவ்வொரு பரோட்டாவாக சிவக்க பொறித்து எடுக்கவும்.