கோதுமை அடை

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்

துவரம்பருப்பு - 1/4 கப்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 கப்

வரமிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

துருவிய கேரட் - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்துமல்லி தழை - சிறிதளவு

தேங்காய் துருவியது - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

துவரம் பருப்பை மிக்சியில் உடைத்து 15 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பவுலில் ஊறவைத்த பருப்பு, கோதுமை மாவு, வெங்காயம்,மிளகாய்த்தூள், உப்பு, கேரட்,தேங்காய், மல்லி, கறிவேப்பிலை எல்லாவறையும் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவை விட சற்று தளர்வாக பிசையவும்.

பிசைந்த மாவில் எலுமிச்சை அளவு எடுத்து நான்ஸ்டிக் தவாவில் கையில் தண்ணீரை தொட்டுக்கொண்டு சமமாக பரத்தவும் சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும். சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

குறிப்புகள்: