கோதுமை ரவை பொங்கல் (2)
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இனுக்கு
முந்திரி பருப்பு - 10
பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும். பாசிப்பருப்பை 10 நிமிடம் ஊற வைக்கவும்.
வாணலியில் கோதுமைரவையை லேசாக வாசனை வரும் வரை வறுக்கவும்.
குக்கரில் கோதுமைரவை, பருப்பு, இஞ்சி, மஞ்சள் தூள், உப்பு, சிறிது கறிவேப்பிலை, ஒரு மேசைக்கரண்டி நெய் மற்றும் மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வாணலியில் மீதமுள்ள நெய்யை சூடாக்கி முந்திரி பருப்பைச் சேர்த்து லேசாக சிவந்ததும் ஒன்றிரண்டாக பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். குக்கரில் ப்ரஷர் அடங்கியதும் திறந்து தாளித்தவற்றை சேர்த்து கிளறவும்.
குறிப்புகள்:
அரிசி பொங்கல் போல மிகவும் குழைந்து இருக்காது.
தேங்காய் சட்னி, மெதுவடையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.