கோதுமை ரவை தோசை
தேவையான பொருட்கள்:
உடைத்த கோதுமை ரவை - 1 டம்ளர்
உளுந்து - 1/2 கப்
பச்சைமிளகாய் - 2
சீரகம் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 8
கறிவேப்பிலை - ஒரு கொத்து
என்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுந்தையும், உடைத்த கோதுமை ரவையையும் தனித்தனியே ஊற வைத்துக் கொள்ளவும்.
நன்கு 1 மணி நேரம் ஊறிய பின் மிக்ஸியில் முதலில் உளுந்தை கழுவி விட்டு போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
அதன் பின் அரைப்பட்ட உளுந்துடன் கோதுமையை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பிறகு எண்ணெயை தவிர இதர பொருட்களை சேர்த்து நன்கு அரைத்து தோசை மாவு பதத்திற்கு உள்ள மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும். அரைத்த மாவை குறைந்தது 3 மணி நேரம் அப்படியே மூடி வைத்து விடவும்.
அதன் பின் சூடான தோசை கல்லில் ஒரு கரண்டி மாவை ஊற்றி மெல்லியதாக வார்த்து அரை தேக்கரண்டி எண்ணெயை எல்லா இடங்களிலும் படும் படி ஊற்றவும். அடி பாகம் சிவந்ததும் திருப்பி போட்டு சிவந்ததும் எடுத்து விடவும்.
குறிப்புகள்:
இதற்க்கு சாம்பார், புதினா மல்லி சட்னி, வெங்காய சட்னி தொட்டு கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.