கோதுமை மாவு ரொட்டி
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1/2 கப்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தையும், பச்சைமிளகாய்யையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு அதில் சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு நன்றாக வதக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் வதக்கியவற்றைப் போட்டு, உப்பும் போட்டு தண்ணீர் விட்டு பிசையவும்.
பிசைந்த மாவு கொஞ்சம் தண்ணீர் கோர்த்து இருக்கவும். அதை பெரிய உருண்டை வடிவத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து வைக்கவும்.
ஒரு வாழை இலை துண்டில் அல்லது பால்கவரிலோ எண்ணெய் தடவி ஒரு உருண்டை மாவை எடுத்து கையினாலே ரொட்டியை தட்டி பரப்பவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் பரப்பின ரொட்டியை பிரித்துப் கல்லில் போட்டு எண்ணெய்விட்டு மறுபக்கமும் திருப்பி போட்டு ரொட்டி வெந்தபின் எடுக்கவும். பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து ரொட்டியைச்சுடவும்.
குறிப்புகள்:
தக்காளி தொக்கு அல்லது தக்காளி ஊறுகாய் வைத்து பரிமாறவும்.