கோதுமை மாவு தோசை (1)
0
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 3 கப்
முட்டை - 1
தேங்காய் பால் - 1/2 கப்
தண்ணீர் - 3 கப்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய், நெய் சேர்த்து - 50 கிராம்
மல்லிகீரை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
கோதுமை மாவில் எல்லா பொருள்களையும் சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தோசை வார்த்து சுற்றி எண்ணெய், நெய் விடவும்.
குறிப்புகள்:
தேங்காய் பாலுக்கு பதில் பசும் பாலும் சேர்த்துக்கொள்ளலாம்.