கோதுமை மாவு தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்

அரிசிமாவு - ஒரு கைப்பிடி

மோர் - 1 குழிக்கரண்டி

பச்சை மிளகாய் - 1

சீரகம் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மோரில் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி போட்டு அதில் உப்பு, சீரகம் சேர்த்து கலக்கி கோதுமை மாவு, அரிசி மாவும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து பத்து நிமிடம் ஊறவைக்கவும். பிறகு தோசைகளாக வார்க்கவும்.

குறிப்புகள்:

தேவைப்பட்டால் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு ஊற்றவும்.