கோதுமை மாவு இனிப்பு தோசை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்

அரிசி மாவு - 1/4 கப்

வெல்லம் - 3/4 கப்

இட்லி சோடா - ஒரு பின்ச்

ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி

எண்ணெய் + பட்டர் - தேவையான அளவு

முந்திரி பருப்பு - 4

உப்பு - ஒரு பின்ச்

செய்முறை:

வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து சூடுப்படுத்தி கரைத்து ஆறியதும் வடிகட்ட வேண்டும்.

கோதுமை மாவு, அரிசி மாவு, முந்திரி, ஏலம், உப்பு, இட்லி சோடா அனைத்தையும் கலந்து வெல்லம் தண்ணீரும் சேர்த்து தேவைக்கு தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து பத்து நிமிடம் ஊறவைத்து எண்ணெயில் சிறிது பட்டர் (அ) நெய்யை உருக்கி உற்றி தோசைகளாக வார்க்கவும்.

குறிப்புகள்: