கோதுமை மாவு இனிப்பு தோசை
0
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
வாழைப்பழம் - 2
வெல்லம் (அ) சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய் (நசுக்கியது) - 1
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
வாழைப்பழம், வெல்லம், ஏலக்காய் சேர்த்து நன்றாக பிசையவும்.
பின் கோதுமை மாவை உப்பு சேர்த்து 1/4 கப் தண்ணீர் சேர்த்து பிசைந்து அதனுடன் வெல்ல, வாழைப்பழ கலவையை சேர்த்து தண்ணீர் தேவை எனில் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து தோசையாக வார்த்து நெய் (அ) எண்ணைய் ஊற்றி திருப்பி போட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.