கோதுமை பரோட்டா

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 3 கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் மாவு, உப்பு, 2 குழிக்கரண்டி எண்ணெய் போட்டு தண்ணீர் விட்டு பிசைந்துக் கொள்ளவும்.

பிசைந்த மாவை 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

பின்னர் சிறு உருண்டைகளாக உருட்டி உருண்டைகளில் சிறிது எண்ணெய் தடவி வைக்கவும்.

பலகையில் சிறிது எண்ணெய் விட்டு மாவு உருண்டையை வைத்து மிக மெல்லியதாக தேய்க்கவும்.

பிறகு தேய்த்த மாவை முன்னும் பின்னுமாக மாறி மாறி மடிக்கவும்.

அதனை வட்டமாக சுற்றி அதன் மேல் எண்ணெயை தடவி வைக்கவும். அதே போல் எல்லா உருண்டைகளையும் சுற்றி வைக்கவும்

சுற்றிய உருண்டைகளை சப்பாத்தி பலகையில் வைத்து மெல்லியதாகவும், மொத்தமாகவும் இல்லாமல் திட்டமாக தேய்க்கவும். (அழுத்தி தேய்க்க கூடாது)

அடுப்பில் நாண் ஸ்டிக் தவாவை போட்டு தேய்த்த பரோட்டாவை போட்டு எண்ணெய் ஊற்றி இருபக்கமும் திருப்பி போட்டு மிதமான தீயில் சுடவும்

சுட்ட பரோட்டாவை பலகையில் வைத்து இரண்டு கைகளால் உள்நோக்கி, அழுத்தமாக தட்டவும் (ஒரு முறை தட்டினால் போதும்).

குறிப்புகள்:

மட்டன், சிக்கன் குழம்பு சூப்பர் காம்பினேஷன் வெஜ் குருமா வைத்தும் சாப்பிடலாம்.