கோதுமை தோசை (6)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 2 கரண்டி

கோதுமை மாவு - 1 கப்

வெந்தயக்கீரை - 1 கப்

தயிர் - 1 கப்

மிளகுத்தூள் - தேவையான அளவு

வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறு துண்டு

கொத்தமல்லி - சிறிது

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடலைப்பருப்பு - 1/4 தேக்கரண்டி

உளுந்து - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

வேர்கடலை - சிறிதளவு

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, வெந்தயக்கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கோதுமை மாவில் தயிர், தோசை மாவு, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

தோசைக்கல் சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பெருங்காயம் தாளித்து கடலைப்பருப்பு, உளுந்து, வேர்கடலை சேர்த்து வதக்கவும்.

அதனுடன் பொடியாக நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

அதிலேயே வெந்தயக்கீரை, கொத்தமல்லித்தழை சேர்த்து அந்த வெப்பத்திலேயே பரத்தி ஆறவைக்கவும்.

ஆறிய பொருட்கள் அனைத்தையும் கோதுமை கலவையில் சேர்த்து, சிறிது நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்.

தோசைக்கல் சூடானதும் தோசைகளாக வார்த்து குறைந்த தீயில் இருப்புறமும் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்புகள்: