கோதுமை தோசை (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமைமாவு - 1 1/2 கப்

இட்லிமாவு - 1 கப்

(அ) அரிசி மாவு - 1/2 கப்

வெங்காயம் - 1

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கொத்தமல்லி - ஒரு பிடி

மோர் - 1/2 கப்

உப்புத்தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். காய்ந்தமிளகாயை மிகவும் சிறிய துண்டுகளாக கிள்ளி வைக்கவும்.

கறிவேப்பிலை கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கோதுமைமாவையும், இட்லிமாவையும் சேர்த்து உப்புத்தூளைப் போட்டு மோரை ஊற்றி நன்கு கலக்கவும். தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து இட்லிக்கும் தோசைக்கும் இடைப்பட்ட மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.

மேற்கண்ட அனைத்து தயாரித்த பொருட்களையும் கோதுமை கரைசலில் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.( ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை).

தோசைக்கல்லை காயவைத்து ஒரு பெரிய குழிக்கரண்டியில் மாவை எடுத்து வார்க்கவும்.

சுற்றிலும் எண்ணெய் ஊற்றி ஒரு புறம் வெந்தவுடன் திருப்பி விட்டு எண்ணெயை சுற்றிலும் ஊற்றி பொன்னிமுறுவலாக சுட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: