கோதுமை கிச்சடி
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 1 கப்
காய்கறி கலவை - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
மல்லித் தழை, புதினா - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்கறி, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறிவிட்டு புதினா, மல்லித் தழை, உப்பு சேர்க்கவும்.
அதனுடன் காய்கறி கலவை சேர்த்து நன்கு கிளறி விட்டு 2 நிமிடம் வேக விடவும்.
இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, பிறகு கோதுமை ரவையைச் சேர்த்து நன்கு கிளறிவிடவும். ஒரு கொதி வந்தபின் 15 நிமிடம் சிம்மில் வேகவிட்டு இறக்கவும்.