கோதுமை இடியாப்பம் (1)

on on off off off 2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வறுத்த கோதுமை மாவு - 2 டம்ளர்

தண்ணீர் அளவு - 2 1/2 டம்ளர்

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்காமல் வெதுவெதுப்பாக சுட வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மாவு, உப்பு, வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். (மாவு கையில் ஒட்ட கூடாது)

இடியாப்ப தட்டிலும், உரலிலும் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளவும்.

பிசைந்த மாவை தட்டில் இடியாப்பமாக பிழியவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதன் மேல் இடியாப்ப தட்டை வைத்து அதன் மேல் ஒரு கிண்ணம் வைத்து மூடவும். (இட்லி சட்டியிலும் வைக்கலாம்)

இடியாப்பம் வேகுவதற்கு 5 நிமிடம் ஆகும். வெந்தததும் இடியாப்பத்தை எடுக்கவும்.

குறிப்புகள்:

முழு கோதுமையை வாசம் வரும் வரை வறுத்து மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும்.

இதனுடன் தேங்காய் பூ, சீனி வைத்து சாப்பிடலாம்.