கோதுமை அடை (2)
தேவையான பொருட்கள்:
சம்பாகோதுமை குருணை - 200 கிராம்
கோதுமை மாவு - 100 கிராம்
முருங்கைக்கீரை - சிறு கைப்பிடி அளவு
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்புத்தூள் - 2 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமை குருணையை அரை லிட்டர் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பூண்டு, இஞ்சியை தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஊறிய கோதுமை ரவையுடன், கோதுமை மாவையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதோடு மிளகாய்த்தூள், சோம்புத்தூள், இஞ்சி, பூண்டு, உப்பு, முருங்கைக்கீரை அனைத்தையும் நன்கு கலந்து அடை வார்க்கும் பக்குவத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானவுடன், ஒரு கரண்டி மாவை ஊற்றி பரப்பி விட வேண்டும்.
ஓரத்திலும் நடுவிலும் அரை தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி விட வேண்டும். 2 நிமிடம் கழித்து திருப்பிப் போட வேண்டும். வெந்த பிறகு எடுத்து விடலாம்.
குறிப்புகள்:
முருங்கைக்கீரைக்கு பதிலாகக் கறிவேப்பிலை போட்டுக் கொள்ளலாம்.
தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கொள்ளலாம்